ponniyin selvan next single release date announced

Advertisment

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4123945e-6429-4f05-8561-2bd0a4b74682" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_28.jpg" />

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான'பொன்னி நதி பாக்கணுமே'பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல்குறித்த அறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'சோழா சோழா'என்ற படத்தின்இரண்டாவது பாடல்வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இவ்விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுபொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலரை வெளியிட உள்ளதாகவும்கூறப்படுகிறது.